வங்கிகள் செயல்படும் நேரம் மீண்டும் மாற்றம்...

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளின் நேரம் 10 மணி முதல் 2 மணி வரை அண்மையில் மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை பயனாளிகள் பெற வங்கிகள் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை ஏற்று வங்கிகள் பழையபடி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வைரஸ் பரவலை தடுக்க வங்கியில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்