உத்தரப்பிரதேச சிறைகளில் மாஸ்க் தயாரிக்கும் பணி தீவிரம்!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், முகக்கவசங்கள் உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறைகளில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்கு உள்ள 71 சிறைகளில் 63 சிறைகள் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
10 நாட்களில் இந்த சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை சுமார் 1,24,500 மாஸ்க்குகளை தயாரித்துள்ளனர். சிறைக்கைதிகள் இந்த முயற்சிக்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்