80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்; நிதி அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
  1. மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும். முதற்கட்டமாக 2000 ரூபாய் உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம் 8.9 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
  2. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன் பெறுவார்கள்.
  3. ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்களுக்கு தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன் பெறுவார்கள்.
  4. 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மூன்று மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படும் மற்றும்  ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
  5. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
  6. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்