கர்ப்பிணிக்கு காரை கொடுத்து உதவிய ரோஜா!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது நடிகை ரோஜா, நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக ரோஜா நகரி தொகுதிக்கு சென்று உள்ளார்.

அப்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதி இல்லை என தெரியவந்துள்ளது. உடனே தனது காரில் அந்தப் பெண்ணை திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றதும் உடனே தனது காரை அனுப்பி கர்ப்பிணிக்கு உதவி செய்த ரோஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்