தமிழர்கள் 200 பேர் மகாராஷ்டிராவில் சிக்கித் தவிப்பு:தமிழகத்தை சேர்ந்த 200 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். எவாட்மால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 பேர் பணியாற்றி வந்தனர்.
 
இந்நிலையில் அவர்கள் அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் தங்கள் வெளியே செல்ல முடியாமலும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  கூறியுள்ளனர்.  மேலும் தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல   தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரொனா தாக்கம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு வரமுடியாமல் அங்கு 200 தமிழர்கள் தவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருவதால் அங்குள்ள தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

 மேலும் தமிழகம் செல்லுமாறு அங்குள்ள மக்கள் நெருக்கடி கொடுப்பதாகவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்