டெல்லியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி

டெல்லியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், அத்தியாவசிய பொருட்களை தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார். இதனை டெல்லி முதலமைச்சர் கெஜரிவால் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் உள்ள வர்த்தகக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை அனுமதிக்குமாறு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%