கொரோனா போர் வீரர்களின் மன உறுதியை உடைக்காதீர்கள்: மத்திய அமைச்சர் வருத்தம்!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியே வருபவர்களை போலீசார் லத்தியால் அடித்து காயப்படுத்துவதாக புகார் எழுந்தது. மருத்துவ சேவை செய்வதற்காக வாகனத்தில் வரும் மருத்துவர்களையும் போலீசார் தாக்குவதாக குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், 'இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராடுவது நமது தேசிய பொறுப்பு. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எங்களது போர் வீரர்கள். ஒரு சிலர் அவர்களக்கு எதிரான பாகுபாட்டை கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. எங்களின் போர் வீரர்களின் மன உறுதியை உடைத்து விடாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்