நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் ரத்து; இன்று முதல் அமல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மத்திய, மற்றும் மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய போக்குவரத்து தவிர மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில், '​​இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அவசரகால சேவைகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமான நேரத்தையும் மிச்சப்படுத்தும்' என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்