கொரோனாவை எதிர்கொள்ள தன்னார்வ மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

கொரோனாவை எதிர்கொள்ள தன்னார்வ மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு


நாட்டில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு தன்னார்வ மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக நீதி ஆயோக் இணையதளத்தில் மத்திய அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரொனா தொற்று நோய்  தீவிரமாகி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த  கூடுதல் மருத்துவர்களின் உதவி, தேவை என்பதால்,  தகுதியான விருப்பமுடைய மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி விருப்பமுள்ள மருத்துவர்கள் வரும் காலங்களில் பொது சுகாதார மையங்களிலும், பயிற்சி மருத்துவமனைகளிலும், பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே ஒய்வு பெற்ற மருத்துவர்கள் , ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தனியார் 
மருத்துவர்கள் ஆகியோரிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்