யுகாதி திருநாள்... பிரதமர் வாழ்த்து!

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று இரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரா மக்கள் குடிபத்வா என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதேபோல் மணிப்பூர் மக்கள் சஜிபு செய்ராஓபா என்ற திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில் 'இந்த திருநாள் நம் வாழ்வில் வளத்தையும், நலத்தையும் கொடுக்கட்டும். இந்தாண்டு முழுமையானதாகவும், பேரிடர்களை எதிர்கொள்ளவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். கொரோனாவுக்கு எதிராக மனிதநேயத்துடன் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்காகவும் பிரார்த்திக்கிறேன்' என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்