சாலையில் சுற்றித் திறியும் இளைஞர்கள்.!

கொரோனா பரவுவதை தடுக்க இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனோ தோற்றால் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடையை மீறி இருசக்கர வாகனங்களை பலர் ஓடிச் செல்கின்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி லத்தியால் அடித்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சில பகுதிகளில் ரோட்டில் தோப்புக்கரணம் போட வைத்துபோலீசார் தண்டனை வழங்கியுள்ளனர்.

இதேபோல் பெண்களும் சாலைகளில் சுற்றித் திரிந்தனர். அவர்களை கண்ட போலீசார் தலையில் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு அவர்களையும் தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். கேரளாவில் தடையை மீறி வெளியே வந்ததாக 402 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் தடையை மீறி சாலையில் சுற்றியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்