கொரோனா வைரஸால் சீனாவில் 2,943-பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஈரானில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் சீனாவில் 2,943-பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஈரானில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த நம்பகமான தகவல்களை பரப்புவதற்கு உலக சுகாதார நிறுவனம் டிக்டாக் செயலியுடன் இணைந்து செயல்படவிருக்கிறது. கொரோனா விழிப்புணர்வு குறித்து டிக்டாக் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசும் அதிகாரி ஒருவர், கொரோனா பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வழிமுறைகள் என்ன என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், முகத்தில் அணியும் முகமூடிகளை எப்படி அணிவது என்பது தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத அறிக்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 80 சதவிகிதம் பேருக்கு நோயின் தாக்கம் லேசாக இருந்ததாகவும், 5% பேருக்கு மிகக் கடுமையாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.