டெல்லி வன்முறை.. போலீசை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர் கைது..
டெல்லி வன்முறையின்போது, போலீஸ்காரர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாருக் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தத் சட்டத்துக்கு ஆதரவாக போராடியவர்களுக்கும், எதிராக போராடியவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 47 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஜாப்ராபாத் பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை, ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில், டெல்லி காரவல் நகரைச் சேர்ந்த ஷாருக் என்ற நபர் தான் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியது என தெரியவந்தது.இதனையடுத்து அவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.