உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத்த நகரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ரூ.1,452 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத்த நகரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ரூ.1,452 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் ப்ரீத்தி ராணியும் நேற்று காலை 6 மணி முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ப்ரீத்தி ராணி தம்முடைய 18 மாத குழந்தையும் உடன் அழைத்து வந்திருந்தார். ப்ரீத்தி தமது குழந்தையை தோளில் சுமந்தபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். நண்பகலில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்தியநாத் புறப்படும் வரையில் அவர் தோளில் கைக்குழந்தையைச் சுமந்தபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ப்ரீத்தி ராணி கூறுகையில்,”கணவருக்கு தேர்வு இருந்ததால், குழந்தையைக் கவனித்துக் கொள்ள அவரால் முடியவில்லை. எனக்கு வேறு வழிதெரியாததால், என் குழந்தையை நானே கவனித்துக் கொண்டேன். வேலையும் முக்கியம் என்பதால் என் குழந்தையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டேன்” எனத் தெரிவித்தார்.
பெண் காவலர் ப்ரீத்தி ராணி தனது கைக்குழந்தையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.