அரசின் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...சென்னையில் 6-ம் தேதி நடக்கிறது...

அரசின் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...சென்னையில் 6-ம் தேதி நடக்கிறது...

அரசின் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...சென்னையில் 6-ம் தேதி நடக்கிறது...

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் சென்னையில் வரும் 6-ம் தேதி அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். 

இந்த முகாமில் 15 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தனியார் நிறுவனங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 35 வயதுக்கு உட்பட்டோர் கலந்துகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com