கொரோனா வைரஸ் அறிகுறி...நொய்டா பள்ளி மூடல்..
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, டெல்லி அருகே நொய்டாவில் பள்ளிக்கூடம் ஒன்று மூடப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இத்தாலிக்கு சென்றுவிட்டு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், தனது மகன் பயிலும் பள்ளியில் கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இப்போது அவருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே பள்ளிக்கு வந்து சென்றதால், யாருக்கும் நோய்தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. எனவே தொற்று உள்ள நபர் வந்து சென்ற நொய்டாவில் உள்ள பள்ளி மூடப்பட்டுள்ளது.
இன்று முதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவர்களுக்கு தொற்று இருக்கிறதா என்று அறிய உ.பி மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.