கொரோனாவை தடுக்க மாட்டு சாணம் பயன்படுத்தலாம்.. பாஜக எம்.எல்.ஏ…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மாட்டு சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் பயன்படுத்தப்படலாம் என்று பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.
சீனா உள்பட 50 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தின் சட்ட சபையில் நேற்று பேசிய பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா, "பசு மாடு என்பது ஒரு சொத்து, இதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில், புற்று நோயாளிகள் பசு மாடுகள் அருகே அமர அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள புற்றுநோயாளிகளுக்கு பசு சாணம் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு சிறுநீர், மாட்டு சாணம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.