மார்ச் 15 முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி…

மார்ச் 15 முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி…

மார்ச் 15 முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி…

வெங்காய விலை வரலாறு காணாத அளவு அதிகரித்ததால், ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வெங்காய விலையை கட்டுப்படுத்த எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக வெங்காய விலை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தற்போது வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வெங்காய விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் மார்ச் 15 முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com