இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா…
சீனாவில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், துபாயில் இருந்து ஹைதராபாத் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானில் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். அவருக்கு (கோவிட்-19) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.