பெண்னை நாய் என்ற பாஜக பிரமுகரை விளாசிய பாலிவுட் நடிகை...

குஜராத்தில் உள்ள ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்வி நிறுவன விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டதா என்பதை அறிய அவர்களின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த விவகாரம் கடும் கண்டனங்களுக்குள்ளானது. 

இதனை தொடர்ந்து தற்போது அந்த கல்வி நிறுவனத்தின் கோவிலைச் சேர்ந்த சுவாமி க்ருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி மாதவிடாய் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சமைத்த உணவை உண்டால் அடுத்த பிறவியில் ஆண்கள் காளைகளாகப் பிறப்பார்கள் என்றும், மாதவிடாய் ஆன பெண்கள் கணவருக்காக சமைத்தால் அவர்கல் நிச்சம் அடுத்த பிறவியில் பெண் நாயாகப் பிறப்பார்கள் என்று அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். 

 

இந்நிலையில் சாமியாரின் இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில் ஹூனாலி குல்லர் ஷ்ராஃப் என்ற பெண் முந்தைய பிறவியில் தனது கணவருக்கு மாதவிடாயின் போது சமைத்த பெண்கள் தற்போது பெண் நாயாகப் பிறந்துள்ளார்கள் எனக் கூறி தான் வளர்க்கும் நாய்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். 

இதற்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளரான கோபால் கிருஷ்ண அகர்வால், இந்த இரு நாய்களில் நீங்கள் எந்த நாய்? என கேட்டு கமாண்ட் செய்தார். கோபால் கிருஷ்ணாவின் இந்த பதிவுக்கு பலரும் கடும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

அந்த வகையில் பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கர், கோபால் கிருஷ்ணாவின் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொதுவெளியில் ஒரு பெண்ணை குறிப்பிட்டு வன்மமாக பேசியிருக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் தன்னை நினைத்து தானே அவமானப்பட்டுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தன்னுடைய பதிவுக்கு எவ்வித மறுப்பும், மன்னிப்பும் தெரிவிக்காமல் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் தான் ஒரு இந்து என்றும் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டு, மாதவிடாயின் போது கணவருக்கு சமைத்து கொடுத்தால் தற்போது பூனையாக பிறந்திருக்கிறீர்கள் என ஸ்வரா பாஸ்கர் மற்றும் ஷூனாலியையும் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்