முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் திருமண புகைப்படம்.. ஆடம்பர வாழ்க்கை..

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பல ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கும், நீதா அம்பானிக்கும் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன், 1985ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முகேஷ் அம்பானி- நீதா அம்பானி திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. 

இதேபோல், நீதா அம்பானி ஆடம்பரமான முறையில் வாழ்ந்து வருகிறார். அவரது ஒரு நாள் வாழ்க்கை செலவு ரூ.7 கோடி. அதில், ரூ.3 லட்சம் தேநீருக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. 

முகேஷ் அம்பானி தவிர, நீதா அம்பானி அணியும் ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் போன்றறை சமூக வலைதளங்களில் வைரலாகும். தற்போது, பிரமிக்கத்தக்க அம்பானியின் வீடு, நீச்சல் குளம் போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அது வைரலாகி வருகிறது. 

அவரது வீட்டில் தேவையைத் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. தியேட்டர் முதல் ஜிம், ஐஸ்கிரீம் பார்லர் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கான வீட்டு பராமரிப்பு, சுத்தம் மற்றும் உலகின் சிறந்த உணவுகளை தயாரிப்பு என போன்றவற்றுக்காக 600க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணிபுரிகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்