தாக்குதலுக்குள்ளான பாஜக பிரமுகரின் மனைவி கருச்சிதைவு! திரிணாமுல் காங்கிரஸ் மீது புகார்…

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பரகனாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகரின் மனைவியை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த சதாம் காசிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் பாஜக பொதுக் கூட்டத்தில்பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். 

பிப்ரவரி 18ஆம் தேதி ஹஸ்னாபாத்தில் அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, மனைவி தனது கணவரை காப்பாற்ற முயன்றபோது, வயிற்றில் பலமாக தாக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கருச்சிதைவு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஹஸ்னாபாத் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்