3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு…

மத்திய, மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் நடத்திய ஆய்வில், உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா, ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோன்பத்ராவில் 2,700 டன் தங்கமும், ஹர்தியில் 650 டன் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கையிருப்பு தங்கத்தின் அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. 

இந்த சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் அந்தப் பகுதியில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

உலக தங்கக் கூட்டமைப்பின்படி, இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு இருக்கிறது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6 சதவீதம் ஆகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்