பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்கள் 93,000 பேர் விருப்ப ஓய்வு…

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஊழியர்கள் சுமார் 93,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.

கடந்த 2019 அக்டோபரில் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 78,569 பிஎஸ்என்எல் ஊழியர்களும், சுமார் 14,400 எம்டிஎன்எல் ஊழியர்களும் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) பெற்றுள்ளனர். 

வி.ஆர்.எஸ் பெற்ற சுமார் 93,000 பேர் மீது ஒரு நீதிமன்ற வழக்கு கூட இல்லை. இந்த விருப்ப ஓய்வு காரணமாக, பிஎஸ்என்எல்-லின் ஊதிய செலவு சுமார் 50 சதவிகிதம் குறையும். அதே நேரத்தில் எம்டிஎன்எல் ஊதிய செலவுகள் 75 சதவிகிதம் குறையும். சுமார் ரூ.1,300 கோடியாக இருந்த ஊழியர்களுக்கான  வருடாந்திர செலவு ரூ.650 கோடியாக குறையும் என்று தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்