மாதவிடாய் இல்லை என நிரூபிக்க உள்ளாடையை கழற்ற சொன்ன கல்லூரி!

குஜராத் மாநிலம் புஜ்ஜில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் சுமார் 1500 மாணவிகள் பயின்று வருகின்றனர். மாதவிடாய் நாட்களில் அங்குள்ள கோயில் மற்றும் விடுதியின் சமையலறைக்குள் செல்லக் கூடாது என மாணவிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை சில மாணவிகள் மீறுவதாக கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் பெண் அலுவலர் ஒருவர் மாதவிடாய் குறித்து அனைவரது முன்னிலையிலும் கேட்டுள்ளார். அதில் சில பெண்கள் மீது சந்தேகம் இருந்ததால் கழிவறைக்கு அழைத்து சென்று உள்ளாடையை கழற்றி மாதவிடாய் இல்லை என காண்பிக்குமாறு கூறியுள்ளார். இதனால் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். 

68 மாணவிகள் இந்த வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வழக்கு தொடர விரும்புபவர்கள் 2 நிபந்தனைகளுடன் வழக்கு தொடரலாம் என கல்லூரி அலுவலர்கள் கூறுவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது விடுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இங்கு எதுவும் நடக்கவில்லை என உறுதியளித்து கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிப்பதாக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்