இது தான் சரியான நேரம்.. பிரதமருக்கு சுப்ரமணியன் சுவாமி அறிவுறுத்தல்!

சீனாவின் வுஹானில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. அந்தப் பகுதியில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் துணிச்சலாக சென்று மீட்டு வந்தது. இந்த செயலை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார். துணிச்சலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளை அவர் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஏர் இந்தியா அதிகாரிகளை பாராட்டியது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘வுஹான் மாகாணத்தில் இருந்து ஏர் இந்தியா, மக்களை தைரியமான முயற்சிகள் மேற்கொண்டு தாய் நாடு அழைத்து வந்ததற்கு பிரதமர் மோடி பாராட்டியிருந்தார் என டிவி சேனல்கள் செய்தி வெளியிடுகின்றன.

நன்று. ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் அனைத்து முயற்சிகளையும் கைவிடுமாறு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டிய நேரம் இது’ என கூறியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை சுப்பிரமணியன் சுவாமி எதிர்த்து வருகிறார். இந்த முடிவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்