கொல்கத்தாவில் மனைவி மீது ஆசிட் வீச்சு -கொடூர கணவன் கைது



கொல்கத்தாவில் குழந்தைக்கு உணவு கொடுக்க சென்ற மனைவி மீது கணவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் தெற்கு நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க சென்ற போது 30 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் அந்த பெண்னை ஸ்குரு டிரைவரால் தலையில் தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தடுக்க முயன்ற போது ஆசிட் வீசியதால் அந்த பெண் நிலை குலைந்து போனார். 

இதனையடுத்து தப்பியோட முயன்ற நபரை அக்கம், பக்கத்தினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான பெண் அவரது மனைவி என்றும், அவர்களிடையெ ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஆசிட் வீசிய நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  கைது செய்தனர்.

இந்த சம்பவம் பள்ளியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் நடந்ததால் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்