அபிநந்தன் மீண்டும் விமானத்தில் பறப்பதை அவரது உடல் தகுதிதான் முடிவு செய்யும்- இந்திய விமான படை தளபதி....

அபிநந்தன் மீண்டும் விமானத்தில் பறப்பதை அவரது உடல் தகுதிதான் முடிவு செய்யும்- இந்திய விமான படை தளபதி....
அபிநந்தன் மீண்டும் விமானத்தில் பறப்பதை அவரது உடல் தகுதிதான் முடிவு செய்யும்- இந்திய விமான படை தளபதி....

பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய வீரர் அபிநந்தன் மீண்டும் விமானத்தில் பறப்பது அவரது உடல் தகுதியை பொறுத்துதான் என இந்திய விமான படை தளபதி கூறினார்.

கடந்த மாதம் 27ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய விமான படை வீரர் அபிநந்தன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அபிநந்தனை உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தியது. அதனை தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

அதன்படி, பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அபிநந்தனை உடனடியாக டெல்லி அழைத்து சென்று ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடம்பில் எதுவும் சிப் கருவிகள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. அபிநந்தனுக்கு பொிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவரது உடம்பை ஸ்கேன் செய்ததில் 2 இடங்களில் காயம் இருப்பது தொியவந்தது. அதனால் அவர் மீண்டும் விமானத்தில் பறப்பரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், விமான படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் மீண்டும் இந்திய போர் விமானத்தில் ஏறுவதை அவரது மருத்துவ அறிக்கையை முடிவு செய்யும். அவரது உடல்நலம் தகுதியாக இருந்தால் அவர் விமானத்தில் பறப்பார் என்று இந்திய விமான படை தளபதி பி.எஸ். தனோவா கூறினார். 

இதற்கிடையே பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே நேற்று மருத்துவமனையில் அபிநந்தனை சந்தித்து நலம் விசாாித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com