தனியார் மயமாகவுள்ள ஏர் இந்தியா நிறுவனம்; நீதிமன்றம் செல்லும் சுப்பிரமணிய சுவாமி..!

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேச விரோதமானது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் கடன் சுமை குறித்து ஒப்பந்ததாரர்கள் யோசிப்பதால், அதனை வாங்க யோசிப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக பாஜக மூத்த  தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது. நாட்டின் முக்கிய பொருளை விற்க முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான் நீதிமன்றம் செல்வேன்” என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்