குடும்பத்தை புரட்டிப்போட்ட 4ம் வகுப்பு மாணவனின் கடிதம்...

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் அவரது தந்தை குறித்து எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. 

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மங்கேஷ் என்ற 4ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அப்பா குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், ”எனது பெயர் மங்கேஷ். எனது அப்பா பரமேஸ்வர், அவர் காசநோயால் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர் இருந்த போது கூலித் தொழில் செய்து எனக்கு உணவு வாங்கி வருவார். பேனா வாங்கி தருவார். என்னை மிகவும் நேசித்தார். நானும் என் அப்பாவை நேசித்தேன். அவர் கடந்த 18ம் தேதி இறந்துவிட்டார். அன்று நானும் அம்மாவும் மிகவும் அழுதோம். அப்போது ஏராளமான உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். எனது அப்பா நீ படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் இப்போது இல்லை. அப்பா உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன் . நானும் அம்மாவும் வீட்டில் பயத்துடனேயே வாழ்கிறோம். மாற்றுத் திறனாளியான அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. கஷ்டமாக இருக்கிறது. அப்பா திரும்பி வந்துவிடுங்கள்” என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. 

இந்த கட்டுரையை படித்த ஆசிரியர் நெகிழ்ச்சி அடைந்து அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த மகாராஷ்டிரா மாநில சமூக நலத்துறை அமைச்சர் உடனடியாக அந்த சிறுவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அனைத்து உதவிகளும் செய்ய முன்வந்துள்ளார். சிறுவனின் தாயாருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை அளிப்பதோடு அவர் சுய தொழில் தொடங்கவும் அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்