சிறுநீர் மூலம் யூரியா-நிதின் கட்கரியின் புது ஐடியா !

சிறுநீர் மூலம் யூரியா-நிதின் கட்கரியின் புது ஐடியா !

சிறுநீரில் இருந்து யூரியா தயாரிக்கும் திட்டம் குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் யோசனை பரவலாக பேசப்படுகிறது .

சிறுநீரில் இருந்து   யூரியா தயாரிக்கும் திட்டம் குறித்த  மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின்  யோசனை பரவலாக பேசப்படுகிறது .

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உயிரி எரிபொருள் தயாரிப்பில் மனிதர்களின் சிறுநீர் பயன்படும் எனத் தெரிவித்தார். 

சிறுநீரில் இருந்து அம்மோனியம் சல்பேட், நைட்ரஜன் எடுக்கலாம் என்றும், சிறுநீரில் இருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் விமான நிலையங்களில் மனிதர்களின் சிறுநீரைச் சேமித்து வைக்க தான் அறிவுறுத்தி இருப்பதாகவும் நாடு முழுவதும் இந்த நடைமுறையை கடைபிடித்தால் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய  அவர், தனது யோசனைகள் அனைத்தும் அற்புதமானவை என்பதால், யாரும் தனக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த யோசனை பரவலாக பேசப்பட்டாலும்,அதிகமான கேலி,கிண்டல் விமர்சனத்திற்கே உள்ளாகி  வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com