இந்தியா போல நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்: பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை!

இந்தியா போல நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்: பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை!
இந்தியா போல நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்: பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை!

இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல, பாகிஸ்தான் மீது தாங்களும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் வீரமரணமடைந்தனர். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பு தான் காரணம். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஈரான் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 27 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு தான் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல, பாகிஸ்தான் மீது தாங்களும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி கூறுகையில், ‘பாகிஸ்தான், அண்டை நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பலம் வாய்ந்த அணுகுண்டுகளை வைத்திருக்கும் உங்களால், உங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முடியவில்லையா? எந்த அண்டை நாட்டையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com