ஜனவரி 22இல் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது…

ஜனவரி 22இல் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது…
டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில், வினய் சர்மா, முகேஷ், அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
இந்நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, முகேஷ் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முகேஷ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு கருணை மனு அனுப்பினார். 
இதையடுத்து, கருணை மனு தாக்கல் செய்துள்ளதால், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. அதே நேரத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
இந்த வழக்கில் திஹார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மரண குற்றவாளியின் தலைவிதி. அவரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து பிறகு இறுதி நிலைக்கு வருகிறது. கருணை மனுவை நிராகரித்த 14 நாட்களுக்கு பிறகு தண்டனை நிறைவேற்ற வேண்டும். கருணை மனு நிலுவையில் இருப்பதால் வரும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.02%
 • தவறான முடிவு
  20.84%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.91%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்