மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருக்கும் ராணுவம்; பிரதமர் மோடி புகழாரம்!

மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருக்கும் ராணுவம்; பிரதமர் மோடி புகழாரம்!

இந்திய ராணுவ தினத்தையொட்டி, ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ராணுவர்களின் வீரத்தை பாரட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “வீரர் மற்றும் அர்ப்பணிப்புக்கும் நமது ராணுவம் பெயர் பெற்றது. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறது. மக்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், எங்கள் ராணுவம் தங்களால் இயன்ற உதவியை செய்கிறது” என தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் கடும் பனிப்பொழிவின் போது, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணியை  100க்கும் மேற்பட்ட ராணுவ நபர்கள், 30 பொதுமக்கள் உதவியுடன் 4 மணி நேரம் நடந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த காட்சிகள் அடங்கிய இந்திய ராணுவம் வெளியிட்டிருந்த வீடியோவை பிரதமர் மோடி ரிடுவீட் செய்துள்ளார். மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற வேண்டி கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்