சிகிச்சை பலனின்றி மசூத் அசார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஷ் இ முகமத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார், 1968ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பஹவல்பூர் பகுதியில், ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 3 வது மகனாகப் பிறந்தான்.
கராச்சியில் படித்து வளர்ந்த அசார், சதே முஜாஹிதீன் மற்றும் ஸ்வதே காஷ்மீர் ஆகிய பத்திரிகையின் எடிட்டராக பணியாற்றியதுடன், ஹர்கத் அல் அன்சார் என்ற பயங்கர வாத அமைப்புடன் தொடர்பு கொண்டு, பல தாக்குதலில் மூளையாக செயல்பட்டதால், அந்த அமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைவன் ஆனான்.
1994ஆம் ஆண்டில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீந்கரில் கைது செய்யப்பட்ட அசார், சிறையில் அடைக்கப்பட்டான்.
1999ஆம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், ஆப்கானிஸ்தான் அருகே காந்தஹாரில் இந்திய விமானம் கடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த பயணிகளை மீட்பதற்காக, சிறையில் இருந்த அசார், விடுவிக்கப்பட்டான்.
பின்னர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்த அசார், ஜெய்ஷ் இ முஹமத் என்ற பயங்கர வாத அமைப்பின் தலைவன் ஆனான்.
2001 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டான் அசார். இதில் சர்வதேச நெருக்கடி காரணமாக், பாகிஸ்தான் அரசு அவனைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தது. ஆனால், 2002 ஆம் ஆண்டு லாகூர் நீதி மன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டான்.
2008ல் மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் அசாரே மூளையாக செயல்பட்டான். 2016ல் இந்தியாவின் பதான்கோட் விமானப்படைத் தக்குதலிலும் ஈடுபட்டான்.
இந் நிலையில், அண்மையில் காஷ்மீரில் 40 சி ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும், இவனது அமைப்பே செயல்பட்டது. தாக்குதலுக்கு அவனது அமைப்பு உடனே பொறுப்பேற்றது.
கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட அசார், பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.