தேசியம்
தாமாக முன்வந்து ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கிய இஸ்லாமியர்கள்!
தாமாக முன்வந்து ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கிய இஸ்லாமியர்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 498 பேர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக உத்தரப்பிரதேச காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. மேலும் வன்முறையின் போது சேதமடைந்த பொருட்களுக்கு உரிய நபர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் புலந்த்சாஹரில் கடந்த வாரம் நடந்த வன்முறையின் போது பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தன. இதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஆறு லட்சத்து 27 ஆயிரத்து 507 ரூபாயை வசூலித்துள்ளனர். இந்த தொகையை வரைவோலையாக புலந்த்சாஹர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.