முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 உதவி; உ.பி., அரசு அதிரடி…
2020 புத்தாண்டின் தொடக்கத்தில், விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்காக யோகி அரசு ஒரு திட்டத்தை தொடங்க உள்ளது. விரைவில் இந்த திட்டத்துக்கு உ.பி. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். மற்ற மதங்களைச் சேர்ந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் சலுகைகள் கிடைக்கும்.
விவாகரத்து செய்யப்பட்ட இந்து பெண்ணுக்கு உத்தரப்பிரதேச அரசு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்க முடிவு செய்துள்ளது. இதேபோல், முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என கூடுதல் தலைமை செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் பலனைப் பெறுவதற்கான, எஃப்.ஐ.ஆரின் நகல் மற்றும் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கும் போதுமானதாக கருதப்படும் என அவர் கூறியுள்ளார்.