விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு..

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு..

1994ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உட்பட 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

1994ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உட்பட 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 

சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், நம்பி நாராயணன் மீது குற்றம் இல்லை என கண்டறியப்பட்டது. தவறுதலாக அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக, நஷ்ட ஈடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு கேரள அரசு இழப்பீடு தொகையை வழங்கியது.

இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, நம்பி நாராயணன் திருவனந்தபுரம் சப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவை சப் கோர்ட்டில் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com