இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று பனாரஸ் பல்கலைக்கழகம்.
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று பனாரஸ் பல்கலைக்கழகம். இது வாரணாசியில் செயல்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இங்கு வித்தியாசமாக ஒரு பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது. பேய் பிடித்தவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பயிற்சி திட்டம் தான் அது. ஆறு மாத பயிற்சி வகுப்பாக நடத்தப்படவுள்ளது.
இந்த வகுப்பானது ஆயுர்வேதா மற்றும் பழங்கால இந்து மத குணப்படுத்தும் முறை பிரிவு ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வகுப்பிற்கு பூட் வித்யா என்ற சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆவிகளை பற்றி அறிதல் என்பது இதன் பொருள்.
பேய் விரட்டுவது பற்றி புகழ்பெற்ற பல்கலைக்கழகமே இப்படி கூறலாமா என சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.