எஸ்.எஸ்.சி சிஜிஎல் 11,271 காலியிடங்கள்; ஆஃப்லைன் முறையில் நாளை தேர்வு…
சி.ஜி.எல் தேர்வு 2018க்கான காலியிடங்களை நிரப்ப பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் காலியாக உள்ள 11,271 பதவிகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர்.
எஸ்.எஸ்.சி சிஜிஎல் 2018க்கான செயல்முறை தேர்வு நடந்து வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி, எஸ்.எஸ்.சி சிஜிஎல் அடுக்கு 3 தேர்வு நடைபெறும். சி.ஜி.எல் பதவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்றாம் கட்ட தேர்வு, ஆஃப்லைன் முறையில் நடத்தப்படுகிறது.
அடுக்கு I, அடுக்கு II, மற்றும் அடுக்கு III தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி சிஜிஎல் 2020 விவரங்கள் செப்டம்பரில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.