வளர்ந்து கொண்டே வரும் தொழில்நுட்பத்தால் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன.
வளர்ந்து கொண்டே வரும் தொழில்நுட்பத்தால் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள இயற்பியல் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வரும் அறிவியலாலர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து அதன் மூலம் மிகப்பெரிய ஆற்றலை உற்பத்தி செய்வது தான் அணுக்கரு இணைவு. சூரியனில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அந்த அணுக்கரு இணைவை செயற்கையாக பூமியில் உருவாக்குவது தான் செயற்கை சூரியன். இதற்காக அணுக்கரு உலையை உருவாக்கியுள்ளனர். அணுக்கரு இணைவு எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ, அவ்வளவு நேரம் சூரியன் ஒளிரும்.
செயற்கை சூரியனின் வெப்பரிலை 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும். இயற்கையான சூரியனை விட இதன் வெப்பம் அதிகம். 2020ம் ஆண்டு செயற்கை சூரியன் வெற்றிகரமாக விண்ணில் ஒளிரும் என சீனர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.