125 கோடி எண்ணிக்கையை எட்டிய ஆதார் கார்டு…
2019 ஆம் ஆண்டின் இறுதியில் 125 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய அரசின் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வசிப்பவர்கள் பலர் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணை முக்கிய அடையாள சான்றாக வைத்திருக்கிறார்கள். இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் முதன்மை அடையாள ஆவணமாக வைத்துள்ளதால், "ஆதார் அடிப்படையிலான அங்கீகார சேவைகள் 37,000 கோடி முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்கள் விவரங்களை ஆதாரில் புதுப்பிப்பதில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர் என்று ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 331 கோடி ஆதார் புதுப்பிப்புகளை (பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை) பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, UIDAI ஒவ்வொரு நாளும் சுமார் 3-4 லட்சம் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என மத்திய அரசின் ஆதாரம் ஆணையம் தெரிவித்துள்ளது.