2020 வங்கிகள் விடுமுறை நாட்கள்; இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி...

2020 வங்கிகள் விடுமுறை நாட்கள்; இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி...

2020 வங்கிகள் விடுமுறை நாட்கள்; இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி...

2020 ஆம் ஆண்டில் நீங்கள் ஓய்வு பயணங்களுக்குத் திட்டமிட்டிருந்தால், உங்கள் வங்கி பரிவர்த்தனை அட்டவணைகள் பாதிக்கப்படாமல் இருக்க வங்கி விடுமுறைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க வகையில், வங்கி விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களிலும் நிறுவனங்களிலும் வேறுபடுகின்றன. 

குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் அல்லது மாநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள வங்கிகள் வெவ்வேறு விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளன. இதேபோல், கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது வங்கிகள் திறக்கப்படுவதில்லை.

 வங்கி விடுமுறைகளின் முழுமையான பட்டியல் இங்கே: 

  1. ஜனவரி 1, 2020 (புதன்) புத்தாண்டு தினம்
  2. ஜனவரி 15, 2020 (புதன்) பொங்கல் 
  3. ஜனவரி 26, 2020 (ஞாயிறு) குடியரசு தினம்
  4. ஜனவரி 30, 2020 (வியாழன்) வசந்த பஞ்சமி
  5. பிப்ரவரி 21, 2020 (வெள்ளி) மகா சிவராத்திரி
  6. மார்ச் 10, 2020 (செவ்வாய்) ஹோலி
  7. மார்ச் 25, 2020 (புதன்) உகாடி
  8. ஏப்ரல் 2, 2020 (வியாழன்) ராம் நவமி
  9. ஏப்ரல் 6, 2020 (திங்கள்) மகாவீர் ஜெயந்தி
  10. ஏப்ரல் 10, 2020 (வெள்ளி) புனித வெள்ளி
  11. ஏப்ரல் 14, 2020 (செவ்வாய்) தமிழ்ப் புத்தாண்டு
  12. மே 1, 2020 (வெள்ளி) மே தினம்
  13. மே 7, 2020 (வியாழன்) புத்த பூர்ணிமா
  14. ஜூலை 31, 2020 (வெள்ளி) பக்ரீத்
  15. ஆகஸ்ட் 3, 2020 (திங்கள்) ரக்சா பந்தன்
  16. ஆகஸ்ட் 11, 2020 (செவ்வாய்) ஜன்மாஷ்டமி
  17. ஆகஸ்ட் 30, 2020 (ஞாயிறு) முஹர்ரம்
  18. அக்டோபர் 2, 2020 (வெள்ளி) காந்தி ஜெயந்தி
  19. அக்டோபர் 26, 2020 (திங்கள்) விஜய தசமி
  20. அக்டோபர் 30, 2020 (வெள்ளி) மிலாது நபி
  21. நவம்பர் 14, 2020 (சனி) தீபாவளி
  22. நவம்பர் 16, 2020 (திங்கள்) பாய் தூஜ்
  23. நவம்பர் 30, 2020 (திங்கள்) குரு நானக் ஜெயந்தி
  24. டிசம்பர் 25, 2020 (வெள்ளி) கிறிஸ்துமஸ் தினம்

இந்த விடுமுறை நாட்களைக் கண்காணித்தால், உங்கள் பயணத்தையும் வங்கி பரிவர்த்தனை நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் திட்டமிட முடியும்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com