ஃபோர்ப்ஸ் பட்டியல்.. இங்கிலாந்து ராணியை பின்னுக்கு தள்ளிய நிர்மலா சீதாராமன்!

அரசியல், தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள உலகின் தலைசிறந்த பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 9வது ஆண்டாக ஜெர்மனியின் சான்சிலர் ஆஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சிரிய அகதிகளை ஜெர்மனி நாட்டிற்குள் அனுமதித்த காரணத்திற்காக தலைசிறந்த பெண்ணாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டினா லெக்ராண்ட் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 34வது இடத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிடித்துள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் 40வது இடத்தையும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் 42வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இந்தப் பட்டியலில் 16 வயதில் இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கிரெட்டா தன்பெர்க் பெற்றுள்ளார். அவர் 100வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்