பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை; ஐரோப்பிய யூனியன் முடிவு!

இந்தியாவில் வரம்பை மீறி பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறி செடிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு இளங்குருத்துப்புழுவை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், மனிதன் ஆரோக்கியமான உணவை உண்ணுவது தடுக்கப்படுவதாக ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பூச்சிக்கொல்லி மருந்து அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆலோசித்த பிறகு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஏற்கனவே விவசாயத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் குளோர்பைரிபாஸ் கொண்ட தயாரிப்புகளை தடை செய்துள்ளன. இதன்படி, ஜனவரி 31, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, குளோர்பைரிபாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து முழுவதுமாக தடை செய்யப்படும் என 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்