பீகாரில்...இணங்க மறுத்த பெண் எரித்துக் கொலை.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஐதராபாத், உன்னாவ் போன்ற சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. அதன் அதிர்ச்சியே இன்னும் ஓயவில்லை.  இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பல தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது பீகாரில் பாலியல் பாலாத்காரத்திற்கு  இணங்க  மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார், முசாபர்பூர் மாவட்டம் அஹியாபூர் நகரில் இளம்பெண் ஒருவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் அங்கு வந்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் அவரது ஆசைக்கு இணங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதனை தொடர்ந்து வீடு திரும்பிய அந்த பெண்ணின் தாயார் மகளின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார். 50 சதவீத தீக்காயங்களுடன் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செயலை செய்த அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்