மாணவிகளிடம் ... அத்துமீறிய ஆசிரியர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஜாஷ்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் ராஜேஷ் குமார் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் படிக்கும் மாணவிகள் பலர், பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், தேர்வில் வெற்றிப் பெற வேண்டும் என்றால் தினமும் எனக்கு சிக்கன் சமைத்துக் கொண்டுவா என்ற சொல்லி அவர் தொல்லைத் தந்ததாகவும் மற்றொரு மாணவி என் உடல் ரீதியானத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திப்பாய் என்றும் மிரட்டியதாகவும்  கூறியுள்ளனர். 

மேலும் சில மாணவிகள் வரலாற்றுப் பாடத்தில் காப்பியடிக்க  வேண்டுமானால் அவர் கூறுவதை செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. 

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ராஜேஷ் குமார் மறுத்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்