தனது கசப்பான அனுபவத்தை வெளிப்படுத்திய கன்னியாஸ்திரி...

தனது கசப்பான அனுபவத்தை வெளிப்படுத்திய கன்னியாஸ்திரி...

கேரளாவிலுள்ள சர்ச்சில் பணியாற்றிய கிறிஸ்துவ பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி லூசி கோலப்புரா பாலியல் பலாத்கார புகார் அளித்தார். மேலும் கன்னியாஸ்திரி லூசி பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கூறி போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அந்த கன்னியாஸ்திரி மீது  சர்ச் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை கன்னியாஸ்திரி பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கன்னியாஸ்திரி லூசி கோலப்புரா தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்களை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். கர்த்தாவின் நாமத்தில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் அவரது கான்வெட் வாழ்க்கையில் 4 பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எழுதியுள்ளார்.

அத்துடன் அவர் பாதிரியார் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதும் அதன் பிறகு தனிமையாக்கப்பட்டும் என தனது வாழ்வில் நடந்த அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புத்தக்கத்தில் சக கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும், ஆனால் அது அவருக்கு தவறாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். 

மேலும் சில வயதான கன்னியாஸ்திரிகள் இளம் கன்னியாஸ்திரிகளை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக பாதிரியார்களுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் சில கான்வெண்ட்களில் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை நிர்வாணப்படுத்தி அதனை கண்டு மகிழ்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த புத்தகத்தில் கன்னியாஸ்திரி பாலியல் சீண்டல் அனுபவங்களுடன் கிறிஸ்துவ சபையில் இருந்து நீக்கப்பட்ட போது மேலதிகாரிகள் கடிதம் உட்பட பல ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.02%
 • தவறான முடிவு
  20.84%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.91%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்