மரத்தை தொட்டால் சுகம் கிடைக்கும் என வதந்தி... கூட்டத்தை கட்டுத்தப்பட்ட முயன்ற 12 போலீசாருக்கு காயம்!

மரத்தை தொட்டால் சுகம் கிடைக்கும் என வதந்தி... கூட்டத்தை கட்டுத்தப்பட்ட முயன்ற 12 போலீசாருக்கு காயம்!

மத்தியப்பிரதேசத்தில் மந்திர மரத்தை தொட்டால் சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற 12 போலீசார் காயமடைந்தனர்.

சத்புரா புலி ரிசர்வ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். ஏனெனில் அங்குள்ள மஹுவா என்ற மரத்தை தொடுவதற்கு கூட்டமாக திரண்டிருந்த அந்த மக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை கீழே தள்ளிவிட்டு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு மரத்தை தொட முயன்றதால் 12 போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நயாகான் கிராமத்தைச் விவசாயி ஒருவர்,  மஹுவா மரத்தைப் பற்றி ஆரம்பித்த வதந்தி தான் காரணம் என கூறப்படுகிறது. இந்த மரத்தை தொடும் நபர்கள், அனைத்து வியாதிகளும், பிரச்சினைகளும் நீங்கி விடும் என நம்புகிறார்கள். மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக வதந்தி காரணமாக, அங்கு தொடர்ந்து மக்கள் திரண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்