பிச்சை கேட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் கைது!

டெல்லியில் 6 வயது சிறுமி ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த 60 வயதான நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒருவர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நான் என் நண்பர்களுடன் கன்னாட் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது 60 வயதான நபர் சிறுமிக்கு முத்தம் கொடுக்க முயன்றார். மேலும் சிறுமியின் அந்தரங்க பாகங்களையும் தொட்டுக் கொண்டு இருந்தார். சிறுமி அழுதுகொண்டு இருந்தார். 

அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தேன். சிறுமி என்னை பார்த்து அழுததையும், அந்த ஏதும் அறியாத கண்களையும் என்னால் மறக்க முடியவே இல்லை' என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்